தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவுக்கு இன்று தமிழகத்தில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிறப்பு மருத்துவ வசதி, முன்கூட்டியே நோயை கண்டறிந்ததால் தமிழகத்தில் கொரோனவால் பலியானவர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கான எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என அவர் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.