தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 500க்கு மேல் இருந்த புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 253 பேர் ஆண்கள் மற்றும் 194 பேர் பெண்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இந்த புதிய பாதிப்பு 500க்கு மேல் இருந்தது. சில நாட்கள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டி சென்றது. இதன் காரணமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,000-ஐ தாண்டியது. இந்த நிலையில் தமிழகத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், வீடுகள் நெருக்கமாக இருப்பதாலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னையில் மட்டும் பாதிப்பு விகிதம் 58.10% ஆக உள்ளது. அதுபோல மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக அதிகரித்துள்ளது. அதனை விகிதம் 23.20% ஆக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.