மிதுன ராசி அன்பர்களே …! பேசுபவரிடம் தயவுசெய்து நிதானமாக இருக்க வேண்டும். சுய கௌரவத்தை பாதுகாக்க வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். அதற்கான செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகத்தில் பின்பற்ற வேண்டும். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். பணவரவு ஓரளவு இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்,உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். இன்று கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும்.
தேவையில்லாத விஷத்தை பேசிவிட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.