விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும். மற்றவரை நம்பி மட்டும் யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளில் கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். பண வரவு இருக்கும். இடமாற்றம் வெளியூர் பயணங்கள் அலைச்சல் ஆகியவையும் இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு கடுமையாக நீங்கள் உழைக்கவேண்டி இருக்கும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள். எதனையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாக இருக்கும். தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள் : 3 மற்றும்5
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.