மீன ராசி அன்பர்களே…! இன்று சிலர் தயவுசெய்து வாக்குவாதம் எதிலும் ஈடுபடவேண்டாம். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைந்து காணப்படும்.
காரிய தடை விலகி செல்லும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். எப்பொழுதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். பயணங்கள் செல்வதாக இருந்தால் மட்டுமே கொஞ்சம் கவனமாக இருங்கள். உடமைகள் மீது கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். இன்று நல்ல பெயர் உங்களுக்கு கிடைக்கும் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மற்றவருக்கு உதவி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள்.
இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.