Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் ரொம்ப முக்கியம்… அது இல்லனா 4, 5 வருஷம் ஆகிடும்… தமிழக அரசு வாதம் …!!

சென்னை உயர்நீதிமன்ற டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகின்றது.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று மனுதாரர் தரப்பில் அனைத்து முக்கிய வாதங்களும் வைக்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதிகள் இதில் திருப்தி இல்லை. எனவே தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்ட நிலையில் அதனை ஏற்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு காலா அவகாசம் வழங்கினர். அதே போல மனுதாரரின் அனைத்து வாதத்திற்கும் பதில் வாதங்களை முன்வைக்கிறோம் என்று தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றதையடுத்து அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ,  தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது டாஸ்மார்க்கு பதிலாக வேறு துறைகள் மூலம் வரும் இந்த வருவாயை வேறு துறைகள் மூலம் ஈட்ட 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று தமிழக அரசு வாதங்களை முன்வைத்து வருகின்றது.

Categories

Tech |