உச்சநீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதற்கு முன்பாக சில மனுக்களும் விசாரிக்கப்பட்டது. அதில் மிக முக்கியமானது நாடு முழுவதும் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கியமான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டதாக அறிவித்தது மட்டுமல்லாமல், வழக்கு தொடுத்த வழக்கறிஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் மதுக்கடைகளில் சமூக விலகல் கடைபிடிக்கவில்லை எனபதால் உச்சநீதிமன்றத்திற்கான சிறப்பு சட்டம் 32ஐ பயன்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. இதற்க்கு உச்சநீதிமன்றம் சார்பில் சிஸ்டத்தில் தலையிட முடியாது என்று கூறி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது என தள்ளுபடி செய்து விட்டது.