Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்க திட்டம்: ராதாகிருஷ்ணன்!!

சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதி வாரியாக திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” சென்னை ராயபுரம் பகுதியில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். கோயம்பேடு தொடர்பாக கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்கள் எங்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனக் கூறியுள்ளார். கொரோனா காரணமாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் விழிப்புடன் செயல்பட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நோய் தொற்று உள்ளவரை தொடுவதால் வாய், மூக்கு வழியாக பரவுகிறது என்று கூறினார். எனவே மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், அடிக்கடி கை கழுவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுய உதவி குழுக்கள் மூலம் நோய் கண்டறியும் பணி மற்றும் காய்ச்சல் முகாம் துவக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை, வருவாய் துறை மூலம் 3 அடுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவிலேயே சென்னையில் மட்டுமே 70 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Categories

Tech |