Categories
சேலம் மாநில செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டது சேலம் மாநகராட்சி…. 35 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனோவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா இல்லாத மாநகராட்சியாக சேலம் மாறியது.

சேலம் மாவட்டம் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளது. சேலத்தில் முதல்முதலாக மார்ச் 11ம் தேதி 5 நபர்களுக்கு கொரோனா வைரசு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 24 ஆண்கள், 11 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று மீதம் இருக்கும் இரண்டு பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் ஆகியோர் குணமடைந்தவர்களை வழி அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் 14 நாட்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தி பின்பற்றி தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் இதுவரை 14,407 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 340 நபர்களுக்கு கோரோனோ பரிசோதனை நடத்தியுள்ளார். மாநகராட்சியின் மேற்கண்ட நடவடிக்கையால் கடந்த 21 நாட்கள் யாரும் பாதிக்கவில்லை.

மேலும் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. சேலம் மாநகராட்சி கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் மீண்டுள்ள நிலையில் 97 இடங்களில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சேலம் வந்த 344 பேர் சேலம் அருகே கருப்பூர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. மேலும் 10 தளங்கள் அமைக்கப்பட்டு, 6 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக சேலம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |