டாஸ்மாக் மதுக்கடைகளை வாங்க வருபவருக்கு 7 நாளில் 7 கலர் அட்டையை வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது .
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான வழிவகைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மதுக்கடைக்கு ஒவ்வொரு நாளும் வருவோருக்கு, ஒவ்வொரு கலரில் அட்டையை வழங்க முன்வந்துள்ளது.மதுகுடிப்போருக்கு 7 நாளில் 7 வண்ண அட்டை கொடுத்து மதுவை விற்பனை செய்ய டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்து மதுவை வாங்கிச் செல்லலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலரில் டோக்கன் தயாரித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.