பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.
அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர், ” இன்று விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக பெரும்பாலான மக்கள் விவசாயத்துறையை சார்ந்தே வாழ்கின்றனர்.மேலும், பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடி நாடாக உள்ளது. கரும்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில்களிலும் இந்தியாமுன்னிலையில் உள்ளது. நமது விவசாயிகள் அனைத்து வகையான சவாலான சூழல்களிலும் பணியாற்றி உள்ளனர் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்ச ஆதார விலையின் அடிப்படையில் ஊரடங்கின் போது மட்டும் ரூ.74,300 கோடிக்கு கொள்முதல் நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஊரடங்கின் போது பாலின் தேவை 20 முதல் 25 % வரை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தில் ரூ.6400 கோடி வரை விவசாயிகளால் கோரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.