Categories
தேசிய செய்திகள்

பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்!

பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில்,

விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாக இருக்கும் என்றும் குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என கூறியுள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க கடந்த 2 மாதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்த அவர்,

குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் ரூ.74,000 கோடி மதிப்பிலான விவசாய உற்பத்தி பொருட்கள் ஊரடங்கு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. 5.60 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. சிறு உணவு நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
என்றும் 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |