Categories
தேசிய செய்திகள்

நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நோய்களை கட்டுப்படுத்த 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில்,

கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது என கூறிய அவர், கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100% தடுப்பு மருந்து இடப்படும். 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளார்.

பால் உற்பத்தித் துறையில் சுமார் 15,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளன. பால் – நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும். பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். பொதுமுடக்க காலத்தில் விவசாயிகளிடமிருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |