மேஷ ராசி அன்பர்களே …! வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு சீராக இருக்கும்.
தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி கூட எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே சனிக்கிழமை என்பதால்எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.