Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…ஆதரவு இருக்கும்…பொறுமை தேவை….!

கடக ராசி அன்பர்களே …!    இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். திடீர் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையான பணம் இருந்தாலும் கூடுமானவரை செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் உள்ளவரிடம் கொஞ்சம் அமைதியாகவும் அன்பாகவும் பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தயவுசெய்து யாரிடமும் கோபப்பட வேண்டாம். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் வரலாம். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டாம் புதிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்தையும் பின்னர் செய்வது ரொம்ப நல்லது. அலுவலக பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். இன்று எந்தவித ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஓரளவு இருந்தாலும் நீங்கள் நிதானமாக தான் செயல்பட வேண்டும்.

உங்களுடைய பேச்சுக்கு எதிர்த்துப் பேசியவர்கள் சற்று அடங்கி விடுவார்கள். காதல் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இந்த சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |