கடலூரில் கொரோனா பாதித்த 214 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 8848 பேருக்குக் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்ட மக்களுக்கு குறைந்த அளவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் வந்தவர்களுக்கு தான் அதிகமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிட்டத்தட்ட நேற்று வரை 413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 36 பேர் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்தவர்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் கொடுக்கப்படநிலையில் தற்போது அவர்கள் அனைவரும் வீடு திரும்புகின்றனர். இதனால் 416 பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 250 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் கடலூர் மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.