தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்து. இதன் உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கலாம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், மதுக்கடைகளை திறப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடித்து, கூட்ட நெரிசலை தடுத்து கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் விற்பனைக்கான வழிவகைகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மதுக்கடைக்கு ஒவ்வொரு நாளும் வருவோருக்கு, ஒவ்வொரு கலரில் அட்டையை வழங்க முன்வந்துள்ளது. மதுகுடிப்போருக்கு 7 நாளில் 7 வண்ண அட்டை கொடுத்து மதுவை விற்பனை செய்ய டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்து மதுவை வாங்கிச் செல்லலாம். டாஸ்மாக் நிர்வாகமும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 கலரில் டோக்கன் தயாரித்துள்ளது.
இன்றைய உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே முக்கிய அமசமாக இருப்பது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவங்குவோர் ஆதார் காட்டாமல் கொண்டு செல்லவேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுக்கு தடை விடுதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் மது வாங்க செல்வோர் ஆதார் கார்ட் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் இல்லை .