Categories
தேசிய செய்திகள்

மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற்றுள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது,” மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் ஆதரவுடன் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மூலிகை தாவரங்கள் பயிரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரூ.4000 கோடி செலவில் 10 லட்சம் ஹெக்டேரில் அடுத்த 2 ஆண்டுகளில் மூலிகை தாவரங்கள் பயிரிடப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மூலிகை தாவரங்களுக்கு பிராந்திய அளவிலான மண்டிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கை நதி ஓரத்தில் 800 ஹெக்டேர் பரப்பில் தேசிய மூலிகை பண்ணை வாரியத்தின் மூலம் மூலிகைகள் வளர்க்கப்படும் என தெரிவித்துள்ளார். மூலிகை தாரங்களை பயிரிடுவதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |