பொருளாதார தடையினால் சொந்த நாட்டிலேயே உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அதிபர் கிம் ஜாங் முடிவு செய்துள்ளார்.
வடகொரியா அரசின் செயல்திட்டங்கள் உலகிற்கு தெரியாத அளவிற்கு ரகசியமாகவே இருந்து வருவதாக பல கருத்துக்கள் இருந்து வருகின்றது. அதற்கேற்றாற் போல் அதிபர் கிம் பற்றிய தகவல்கள் வெளியில் வராமல் இருந்தது. பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்ததாக தகவல் பரவியது. ஆனால் அதிபரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தென்கொரியா தெரிவித்தது.
இந்நிலையில் அணு ஆயுத சோதனை நடத்தியதாக குற்றம் சுமத்தி வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி அடி எடுக்கும் விதமாக வடகொரியாவின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் வலியுறுத்தி வந்தார்.
இதனைதொடர்ந்து அதிபரின் இந்த கொள்கை முடிவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வடகொரியா கொள்கை பரப்புச் செயலாளர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து கைதட்டி உற்சாகப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமன்றி கிம்மின் அறிவுறுத்தலை காலதாமதபடுத்தாமல் நம்போ நகரில் இருக்கும் விவசாயிகள் இயந்திரங்களின் மூலம் நாற்று நடும் பணிகளை தொடங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.