Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தின் கதை இதானா….? படக்குழுவினர் அதிர்ச்சி …..!!

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …..

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

பொதுவாக  படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க நடிகர்களும், தயாரிப்பாளர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.படப்பிடிப்பின் போது துணை நடிகர்,நடிகைகளையும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் செல்போன் பயன்படுத்துவதற்கும்  அனுமதி கிடையாது.இதற்காக தனியார் பாதுகாவலர்களையும் நிறுத்தி வைப்பார்கள். ஆனால் அதையும் மீறி சில படங்களின் கதைகள் வெளியே கசிந்து விடுவது உண்டு.

நடிகர் விஜயும்,கதிரும் க்கான பட முடிவு

இந்நிலையில் விஜய்யின்63-வது  படத்த்தின் கதை கசிந்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜயும், கதிரும் விஜய், கதிர் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.  இவர்கள் இருவரும் கால்பந்து விளையாட்டு வீரர்களாக நடித்துள்ளனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெறுகின்றனர். பின்பு இருவரும் கால்பந்து பயிற்சியாளர்களாக மாறுகிறார்கள். இதில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். போலீசார் இந்த கொலையை விசாரிப்பதில் கவணம் செலுத்தாததால், கொலைகாரர்களை கண்டுபிடிக்க நடிகர் விஜய் களம் இறங்குகிறார்.

அப்போது தன் நண்பனின் கொலைக்கு பின்னால் பல பயங்கர சதித்திட்டங்கள் இருப்பது விஜய்க்கு தெரிய வருகிறது. பின் வில்லன்களை கண்டு பிடித்து அவர்களுடன் மோதி அவர்களை அழிக்கிறார். பின்னர் கதிர் பயிற்சி அளித்த கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி எப்படி சாம்பியன் கோப்பையை வெல்ல வைக்கிறார்,என்பது கதை இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Categories

Tech |