ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது நீண்ட நாள் சேமிப்பு தொகையான ரூபாய் 76,030 ஐ நிவாரண பொருள்களாக வழங்கிய தற்காலிக பேராரசிரியர்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் உணவின்றி தவிக்கும் பாமர மக்களுக்கு உதவுவதற்காக தனிமனிதர்கள் சிலரும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து உதவி கரம் நீட்டிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில்,
தூத்துக்குடி மாவட்டம் விளத்திக்குளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் உள்ள மனோன்மணியம் உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் செ.சுரேஷ் பாண்டி என்பவர் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிமனிதனாக உதவிக்கரம் நீட்டி உதவியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒரு தற்காலிக பேராசிரியராக கொரோனா நிவாரணமாக இதுவரை என்னால் இயன்ற வரை அரிசிக்கு ரூ27,500, மாஸ்க் -ரூ1,250,கபசுரா-ரூ1320,உணவு ரூ12,500,இதர செலவுகள் ரூ34,710 என மொத்தம் 76,030.என நிவாரண பொருட்கள் வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன்.நீங்களும் உதவலாம்.
மக்களிடம் செல்வோம்.மக்களை படிப்போம். என்று கூறினார். அதற்கு முன்பாக கேரள மாநிலத்தில் வெள்ளம் வந்த போதிலும் சரி, தமிழகத்தில் நாகை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய போதிலும் சரி,
தனது மாணவர்களின் உதவியுடன் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல உள்ளம் கொண்ட இந்த நல்ல மனிதரின் நற்பணிகள் மென்மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறோம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.