தனுசு ராசி அன்பர்களே …! இன்று புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சிலருக்கு அதன் மூலம் நல்ல வாய்ப்புகளும் அமையும். எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியம் நடக்கும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் தொழில் மேன்மை அடையக்கூடும். நிறைவான பொருளாதாரமும் பெறுவீர்கள். வரனுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட கூடும். பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவீர்கள்.
இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமை காணும் நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமிட தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.