Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…பணிச்சுமை அதிகரிக்கும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

மகர ராசி அன்பர்களே …!    தேவையான பணம் இருப்பதால் திடீரென ஏற்படும் செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கை துணை உங்கள் யோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வகையில் இருக்கும்.

காரியத்தடை போன்றவை அவ்வப்போது வந்து செல்லும். பணவரவு ஓரளவு சீராக இருக்கும். இன்று யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக இருங்கள் எப்போதுமே அதுதான் நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை  செரிமான கோளாறுகள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். காதலர்கள் இன்று பொறுமை காப்பது ரொம்ப நல்லது.

பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |