உத்தரபிரதேச மாநிலம் அவுரியா என்ற பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறியதாவது, ” உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.