மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 4ஆம் கட்ட அறிவிப்பை வெளியிடுகின்றார்.
கொரோனா பாதிப்பால் 20லட்சம் கோடி நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை 3 கட்டமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் தவிர மிகவும் முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் விவசாய சந்தை நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும், சீர்திருத்தங்கள் செய்யப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையடுத்து கார்ப்ரேட் நிறுவனங்கள் மற்றும் கெமிக்கல், சுற்றுலாத்துறை போன்ற முக்கியத் துறைகளிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக உரத் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை தயாரிப்பவர்கள் ஆகியோர் உடனடியாக தங்களுடைய செயல்பாட்டை தொடங்கினால்தான் விவசாயிகளுக்கு அடுத்த பருவத்திற்கான தேவையான பொருட்கள் கிடைக்கும் என்றும் அது தொடர்பான அறிவிப்புகள் வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக 4ஆம் கட்ட அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் இன்று வெளியிடுகின்றார்.