Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கியது!

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அயல்நாட்டு பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான குழுவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசு அமைத்த சிறப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1500 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடம்பெயரும் நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு பல்வறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

நேற்று தொழில் துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் 24 மணி நேரத்தில் தொழில் துறை அனுமதி வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் கடனுதவி எளிதில் கிடைப்பதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் தொழில் துறையினர் சந்திக்க விரும்பினால் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |