முடிதிருத்துவோர் அனைவருக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பல்வேறு விதமான அம்சங்களை கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தவணை ஆயிரம், ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முடிதிருத்தும் நல வாரிய உறுப்பினராக உள்ள 14, 660 நபர்களுக்கு இரண்டு தவணையாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்படாமல் இருக்க கூடிய முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பதிவு பெறாத தொழிலாளர்கள் கிராமப்புறங்கள் என்றால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமும், பேரூராட்சி பகுதியில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், மாநகராட்சி பகுதிகளில் நிலையில் இருக்கக்கூடிய மண்டல அலுவலரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி ஆய்வு செய்து தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தலா 2,000 வழங்கும் வழங்குவார்கள் என்றும் நலவாரியம் இல்லாத நபர்களுக்கு இது பொருந்தும் என்று அந்த அறிக்கை சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.