கடலூரில் டாஸ்மாக் மதுபானக்கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
டாஸ்மார்க் கடைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய அளவு காவல்துறை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக டாஸ்மார்க் கடையில் தனிமனித இடைவேளைக்காக நாளொன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வண்ணங்களில் மது வாங்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இன்று 500 பேருக்கும் காலையிலேயே டோக்கன் கொடுக்கப்பட்டு விட்டது. நாளை, நாளை மறுநாள் மது வாங்கவும் பலர் டோக்கன் வாங்கி சென்று விட்டார்கள். இந்நிலையில் ஒரு சிலர் கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மது வாங்க முயற்சித்திருக்கிறார்கள். அங்கிருந்த போலீசார் இதை தெரிந்து கொண்டு சம்மந்தப்பட்ட 16 பேரை கைது செய்திருக்கிறார்கள்.