டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 முகக்கவசங்கள் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மதுக்கடை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ” நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், சமூக பிரச்சையாக பார்க்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் மூடினால் மற்ற மாநிலத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்களுக்கு மக்கள் படையெடுப்பர். இல்லையென்றால் கள்ள சந்தையில் விற்பனை மேற்கொள்ளப்படும். இதனால் ஒரு வகையில் வருவாய் இழப்பு தமிழகத்திற்கு ஏற்படும் என்ற காரணத்தால் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தில் மூடினால் மற்ற மாநிலங்களில் இருந்து மது இங்கு வராது என்பது என்ன நிச்சயம் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர், ” தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம். ஆனால் பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.