தாறு மாறாக ஓடிய காரை சோதனையிட்ட காவல் அதிகாரிகள் வெட்டப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டறிந்துள்ளனர்
பிரிட்டனில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அந்தப் பெண் பர்மிங்காமைச் சேர்ந்த Gareeca(27) என்றும், அந்த ஆண் Wolverhamptonஐச் சேர்ந்த Mahesh(38) எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவர்களது காரை சோதனையிட்ட போது காரில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி கிடைத்துள்ளது. திறக்கப்பட்ட சூட்கேஸ்களில் ஒரு பெண்ணின் உடலும் அவரது உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். உடல் பாகங்கள் அனைத்தையும் பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பியதோடு உடல் யாருடையது என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனையும் நடந்து வருகின்றது.
இதனிடையே கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய வீடு ஒன்றை சோதனையிட்ட பொழுது ரத்தக் கறைகள் அதிகமாக இருந்ததாகவும், அங்கு வட்டவடிவ அறம் ஒன்று கிடைத்ததாகவும் கொலை செய்யப்பட்ட பெண் இரண்டு துண்டுகளாக அறுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்டவர்களிடம் இறந்த பெண் யார் என்றும் எதற்காக கொலை செய்தார் என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.