தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது.
இதற்க்கு ஆம்பன் புயல் என என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை நோக்கி நகரும் என்றும், அதன் பின்னர் வடகிழக்கு திசையில் நகரம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நாகை, தூத்துக்குடி, காரைக்காலில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.