ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநில அரசு நிவாரணம்:
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவரணம் வழங்குவதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் இரங்கல்:
உத்தர பிரதேசத்தின் அவுரயியா என்ற இடத்தில் நடந்த சாலை விபத்து மிகவும் துயரமானது என கூறியுள்ளார். மீட்பு பணிகளில் அரசு தீவிரமாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் இரங்கல்:
உத்தரபிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதல்வர் கூறியுள்ளார். மேலும் அந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.