கொரோனா வைரஸ் அளிக்கும் முயற்சியில் எலக்ட்ரானிக் முகக்கவசம் கண்டுபிடிப்பு…
அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியாமல் போராடி வருகிறன. இந்த நிலையில் இதற்கு உதவும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ உயர் அதிகாரியான கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை மற்றும் அவரது மனைவி கனக லதா இருவரும் இணைந்து ரெஸ்பிரேட்டருடன், எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பு முகக்கவசத்தை தயாரித்துள்ளார். இந்த முக கவசங்கள் விமானப்படை, ரயில்வே போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்துவதால் ஆக்சிஜன் எளிதாக உள்ளே செல்லவும் அதில் கொரோனா வைரஸ் போன்ற கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் உயிரை இழக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று அருகில் உள்ளவர்கள் இருந்தாலும் இதை பயன்படுத்துவதால் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். ஊரடங்கு நேரத்தில் தங்களின் நேரத்தை வீணாக்காமல் வைரஸ் பாதிப்பை தடுக்கும் நோக்கத்தில் உருவான இந்த கண்டுபிடிப்பு, ராணுவ பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.