Categories
அரசியல்

1 மாதத்தில்…. ரூ 4,000,00,00,000 லாபம்… நாட்டிலே தமிழகம் முதலிடம் ..!!

தமிழகத்தின் வருவாயை பெருக்கு தற்போது அரசின் கையில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு கேடயமாக மது பானங்கள் மட்டுமே இருக்கிறது.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழகத்திற்கான நிதிகளை பெறுவதில் மிகப்பெரிய சிக்கலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் முடங்கி இருப்பதினால் தமிழகத்தினுடைய நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியாத சூழல் இருக்கிறது. இந்த சூழலில் தற்போது மதுக் கடைகள் மூலமாக தமிழகத்திற்கான நிதியைப் பெறுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. மதுவால் அதிகமான நிதியானது தமிழகத்தினுடைய பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது. இதை கண்ணோடு பார்க்கும் பொழுது முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசுசார் நிறுவன ஊழியர்கள், அரசு சார்ந்த வாரியங்கள், பொதுமக்களிடமிருந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி பெறப்பட்டது.

இந்த நிதிகளை  விட டாஸ்மாக் மூலமாகக் கிடைக்கும் நிதியானது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மே மாதம் 5ம் தேதி நிலவரப்படி 347.76 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கிடைத்திருந்தது. இதேபோல் கடந்த மே மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை 9 நாட்களில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக கிடைத்திருக்கிறது.  இந்த தொகையைக் காட்டிலும் டாஸ்மாக்கடை கடந்த 7,8 தேதிகளில் திறக்கப்பட்ட போது அந்த இரண்டு நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளின் மூலமாக 294 கோடி ரூபாய் வருவாய் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது.

மே மாதம் 7ம் தேதி முதல் நாளில் மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் மே மாதம் 8ஆம் தேதி 124 கோடிக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற இந்தியாவினுடைய பல்வேறு மாநிலங்களும் மதுபானங்களின் மூலமாக கிடைக்கக்கூடிய  நிதி தற்போது அதிகமாக இருக்கின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 4,000 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யபடுகிறது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக தெலுங்கானா,கர்நாடகாவில் 3,600 கோடிக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, மேற்கு வங்கத்தில் 3,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட முடிகிறது. நிதிச்சுமையை கட்டுப்படுத்துவதற்காக ஆந்திராவில் 75% மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. டெல்லியில் 70% கர்நாடகாவில் 17%, தெலுங்கானாவில் 16%, தமிழ்நாட்டில் 15%, மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய  சூழலின் தமிழகத்தினுடைய பொருளாதார கட்டமைப்பு சிறு, குறு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தினுடைய நிதி வருவாயை பெருக்குவதற்காக தற்போது அரசின் கையில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு கேடயமாக இந்த மது பானங்கள் மட்டுமே இருக்கிறது.

 

Categories

Tech |