பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார்.
போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
பின்னர் கனிம துறை அறிவிப்பு குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர், வணிக ரீதியாக நிலக்கரி கிடைப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரி கட்டமைப்பை மேம்படுத்த 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.