Categories
தேசிய செய்திகள்

கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” 2023 முதல் 2024ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டன் வெட்டி எடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கனிமவளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பகுதி அளவு நிலக்கரி சுரங்ககளும் இந்தி ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார்.

500 கனிம வளச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளார். அலுமினிய துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படுகின்றன. மேலும் கனிம குத்தகை வழங்கும் போது முத்திரைத்தாள் கட்டணம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனிமவளத்துறை சார்பில் வெவ்வேறு கனிமங்களுக்கான அட்டவணை உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 50, நிலக்கரி படுகைகளில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு ஏலம் விடப்படும் என கூறியுள்ளார். மேலும் நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருகுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர் நிலக்கரி துறையில் தனியார் துறை பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

கனிமவளத்துறையில் நிலையான விலை நிர்ணயத்திற்கு பதில் வருவாயில் பங்கு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களை இனி யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொது சந்தையில் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக 50 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன்” கூறியுள்ளார்.

Categories

Tech |