Categories
தேசிய செய்திகள்

சமூக கட்டமைப்புகள் மேம்பாட்டில் தனியார் துறையை ஊக்குவிக்க ரூ.8,100 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!!

கல்வி, பொது போக்குவரத்து உள்ளிட்ட சமூக கட்டமைப்புகள் மேம்பாட்டில் தனியார் துறையை ஊக்குவிக்க ரூ.8,100 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று கனிமவளம் சார்ந்த துறைகள் போன்றவற்றிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில், கல்வி, பொது போக்குவரத்து உள்ளிட்ட சமூக கட்டமைப்புகள் மேம்பாட்டில் தனியார் துறையை ஊக்குவிக்க ரூ.8,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு துறை உற்பத்தியில் தற்சார்பை எட்ட மேக் இந்த இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் கார்ப்பரேட் மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |