Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(17.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

17-05-2020, வைகாசி 04, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30.

இன்றைய ராசிப்பலன் –  17.05.2020

மேஷம்

குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உடல் நலத்தில் வயிறு தொடர்பான உபாதைகள் உண்டாகலாம். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

 
ரிஷபம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிக அளவில் பொறுமையை கடை பிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும்.

மிதுனம்

பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புக்கள் குணமாகும்.  நண்பர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கடகம்

உங்களுக்கு வரவை விட செலவு அதிகமாக இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி குறைய வாய்ப்பு உண்டு. குடும்ப பிரச்சனைகளை பொறுமையாக கடைபிடிப்பது நல்லது. திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது.

கன்னி

இன்று உடன்பிறந்தவர்கள் வழியாக நற்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்துகொள்வார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

துலாம்

இன்று பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றம் காணப்படும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுபகாரியங்களில் தொடங்க அனுகூலமான நாள்.

விருச்சிகம்

எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. பணவரவு சுமாராக தான் இருக்கும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் செலவுகள் இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில உபாதைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மீனம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

Categories

Tech |