மிதுன ராசி அன்பர்களே …! நீங்கள் தேடிச் சென்ற நபர் தானே வந்து சந்திக்கக்கூடும். அலைபேசி வாயிலாக நற்செய்தி வந்து சேரும் யோகம் உண்டாகும். புதிய வளர்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கலாம்.
பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாகப் பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். நீண்ட தூர தகவல்கள் நன்மையாக இருக்கும். எதிலும் நிதானமாக இருங்கள். இன்று பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை செலுத்த வேண்டும். இன்று யாரிடமும் புதிதாக கடன் வாங்க வேண்டாம்.
இன்று உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பானதாக உள்ளது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.