கன்னி ராசி அன்பர்களே …! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபமே கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதிகள் கிடைக்கும்.
புதிய ஆர்டர்கள் வியாபாரத்திற்கு புதிதாக இடம் வாங்க கூடிய சூழலும் அமையும். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். சிக்கனமாக நடந்துகொண்டு ஆதரவைப் பெறுவீர்கள். கூடுமானவரை செலவை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கிய பொருத்தவரை எந்த விதப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்வது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: இளம்சிவப்பு மற்றும் இளம்பச்சை நிறம்.