துலாம் ராசி அன்பர்களே …! இன்று உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் கலக்கம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவுகள் அதிகரிக்கும்.
அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சீராகவே இருக்கும். சம்பந்தமில்லாத பிரச்சனைகள் மட்டும் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். கடுமையான உழைப்பு இருக்கும். அதனால் உடல்சோர்வு ஏற்படும். கூடுமானவரை சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.
இன்று புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.