Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மாற்றங்கள் செய்வீர்கள்…ஆதாயம் உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று உயர் அதிகாரிகள் ஒத்தாசையாக உங்களுக்கு இருப்பார்கள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்கள் செய்வீர்கள். இளைய சகோதரர்களால் நன்மை கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.

வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாகவே இருக்கும். நிதானமாக இருங்கள் மனதில் தேவையில்லாத விஷயத்திற்காக குழப்பிக்கொள்ள வேண்டாம். சக ஊழியருடன் சகஜமாக பழகி காரியம் மேற்கொள்ளுவீர்கள். எடுத்த முயற்சியில் ஓரளவு வெற்றி கிட்டும். நிதி மேலாண்மை கூட ஓரளவு சீராகவே இருக்கும்.

ஒப்பந்தம் சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். சூரியபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து காரியங்களும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |