Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்று ரூ.163 கோடிக்கு மது விற்பனை…..! மதுரை மண்டலம் ஹாட்ரிக் சாதனை …!!

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் மதுரை மண்டலமே முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதியை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை முதலே காத்துக் கிடந்து மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். அனைத்து மதுக்கடைகளையும் சமூக இடைவெளி கடைபிடிக்க டோக்கன் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு 70 டோக்கன் என்று ஒரு நாளைக்கு 700 டோக்கன் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2 நாளும் மதுரை மண்டலமே முதலிடம் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது நாளிலும் முதலிடம் பெற்றுள்ளது.

Categories

Tech |