சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, உலகெங்கிலும் பரவி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது..இந்த நோய்யின் காரணமாக, இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 45 லட்சத்திற்குக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் மிகவும் அடிதளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடடையே, கொரோனா வைரஸ் தொற்று குறித்த உண்மைகளை சீனா மூடி மறைத்ததால் தான் இந்த பேரிடர் ஏற்பட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக, சீனாவைத் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கவின் செனட் உறுப்பினரான தோம் தில்லிஸ் என்பவர் 18 புள்ளிகள் கொண்ட செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த திட்டத்தில் அவர் கூறியவை, “கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீனா நயவஞ்சகமாக மூடி மறைத்ததால் ஏராளமான அமெரிக்கர்கள் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அமெரிக்காவின் தொழில்நுட்பத்தையும், வேலைவாய்ப்பையும் திருடுகின்றன. நம் நேச நாடுகளின் இறையாண்மையையும் அச்சுறுத்தி வருகின்றது. அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த சுதந்திர நாடுகளும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார். சீனாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும். மேலும் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் போற்றவற்றை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்ஏன்றும் குறிப்பிட்டார்.
சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களின் தொழிற்சாலைகளை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் தொழில்நுட்பத்தைச் சீனா திருடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். விநியோக சங்கிலியில் சீனாவை நம்பியிருப்பதை படிப்படியாகக் குறைய்துக்கொள்ள வேண்டும். இணைய பாதுகாப்பு வலுபடுத்த வேண்டும். மேலும் சீனா அவர்களின் கடன்களை அடைக்க அமெரிக்காவின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஹுவாவே நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். மேலும் நட்பு நாடுகளையும் இதனை மேற்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிறுத்த ராணுவத்திற்கு 20 பில்லியின் டாலர் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், நட்பு நாடுகளின் ராணுவ உறவை ஆழப்படுத்தவும், இந்தியா, தைவான், வியாட்நாம் ஆகிய நாடுகளுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வதை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த செயல்திட்டதில் அறிவுறித்தியுள்ளார். சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பாதுகாப்புப் படையை வளர்க்கவும், அந்நாட்டின் ராணுவத்திற்கு ஆயுதங்களை விநியோகம் செய்யவும் தில்லிஸின் செயல்திட்டதில் அறிவுறித்தியுள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் வின்டர் ஒலிம்பிக்கைக் கைவிடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிர்க்கு வேண்டுகோள் விடுக்குமாறும் செனட் உறுப்பினர் தில்லிஸின் அமெரிக்க அரசை வலியுறுத்துகிறார். கொரோனா வைரஸ் குறித்து சீன அரசு மூடிமறைத்த விவகாரங்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசை வலியுறுத்துகிறது இந்த செயல்திட்டம். வளரும் நாடுகளைக் கடன் வலையில் சிக்க வைக்கவும், சீனாவின் ராஜதந்திரத்தை உலகிற்கு உடைத்துக் காட்டவும், இனி வரும் காலத்தில் கொடூர வைரஸ்கள் பரவும் போது அதனை மற்ற நாடுகள் எவ்வாறு கையாளுகின்றன என்பதைக் கண்காணிக்க சர்வதேச அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்று தில்லிஸின் குறிப்பிட்டுள்ளார்.