Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும் – நிதியமைச்சர்!

ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட உள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில்,கல்வித்துறைக்கான அறிவிப்பில், டிஜிட்டல் முறையில் கல்வி கற்க இ-வித்யா திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வழி கல்வி கற்பித்தல் உடனடியாக செயல்படுத்தப்படும்.

பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட உள்ளன என்றும் ஏற்கனவே 3 கல்விச் சேனல்கள் உள்ள நிலையில் மேலும் 12 புதிய கல்விச் சேனல்கள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டி.வி. சேனல், மாற்றுத் திறனாளிகளுக்கான மின்-பாடங்கள் உருவாக்கப்படும். புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வசதி இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தப்படும். அதுமட்டுமின்றி திக்‌ஷா என்ற பெயரில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே தேசம் ஒரே கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |