அனைத்து தொழில்துறைகளிலும் தனியாருக்கு அனுமதி, பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் பல்வேறு விதமான தொழில்துறைகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்த அவர், தொழில் செய்வதை எளிமையாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டமாக அமலுக்கு வரும் என கூறியுள்ளார். அதன்படி , கொரோனா வைரஸ் காரணமாக திருப்பி செலுத்தப்படாத சிறுகுறு நிறுவனங்களின் கடன் வாராக் கடனாக எடுத்துக் கொள்ளப்படாது.
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கடன் தொகை காட்டாமல் இருந்தால் தவணை தவறியதாக கருதப்பட மாட்டாது. வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி காலக்கெடுவை நீட்டித்து கொள்ளலாம். ரூ.1 கோடி வரை கடன் பாக்கி இருந்தால் தான் குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் விதி தளர்வு அளிக்கப்படுகிறது.
மேலும் நிறுவனங்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை ஓராண்டுக்கு எடுக்கப்பட மாட்டாது என்றும் அனைத்து தொழில்துறைகளிலும் தனியாருக்கு அனுமதி, தேசிய முக்கியத்துவம் இல்லாத பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தனியார் பங்களிப்பு இருந்தாலும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தொடரும். சில முக்கியமான துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்குமாறு அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார்.