ஈரோட்டியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் அதோடு சேர்த்து சட்டமன்ற இடை தேர்தலும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகம் அமைத்தனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று திமுக தலைமையில் காங்கிரஸ் , வி.சி.க , ம.தி.மு.க , இடதுசாரிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொ.ம.தேக மற்றும் ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இணைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதே போல அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
திமுக தலைமையில் உள்ள கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு , வேட்பாளர்கள் பட்டியல் என அனைத்தும் முடிந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக_விற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது . மதிமுக கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து திமுக கூட்டணியில் ஐ.ஜே.கே , கொ.ம.தே.க , வி.சி.க மற்றும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.