Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்தன ….!!

1 லட்சம் பிசிஆர் பரிசோதனை உபகரணங்கள் தமிழகம் வந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை வேகமாக கண்டறியும் துரித பரிசோதனை கருவிகளை இந்தியா சீனாவிலிருந்து வாங்கியது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ரேப்பிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் சரியான முடிவுகளை கொடுக்கவில்லை என்ற காரணத்தால் அதைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தின. மேலும் சீனாவில் இருந்து வாங்கிய அனைத்து பரிசோதனை கருவிகளும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் தான் தமிழக அரசு தென் கொரியாவிடம் இருந்து  10 லட்சம் pcr பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்தது. இதில் ஒரு லட்சம் பரிசோதனைக் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக வாரம் தோறும் ஒரு லட்சம் பரிசோதனை கருவிகள் என்று தமிழகத்துக்கு முழுமையாக வந்து விடும் என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |