Categories
உலக செய்திகள்

இந்தியாவை சீண்டும் சீனா…. ! எல்லைக்குள் ஊடுருவும் ஹெலிகாப்டர்கள் …!!

இமாச்சல பிரதேசம் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- சீனா 3, 488 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்துள்ளது.  இவற்றில் பல பகுதி எல்லைகள் வரையறுக்கப் படாமலே  இருக்கிறது. இதனால்எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய-சீன நாட்டு வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்ஏற்படும்.  இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநில எல்லையில் லஹால், ஸ்பிட்டி பகுதியில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீன ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லையின் உள்ளே 12 கிலோமீட்டர் வந்ததாக சொல்லப்படுகிறது . இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச காவல்துறையினர், இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இமாச்சல் எல்லையில் பறந்த சீன ஹெலிகாப்டர் வழக்கத்தை விட தாழ்வான உயரத்தில் பறந்ததாக அம்மாநில காவல்துறை தெரிவிக்கின்றது.

கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் சீன ராணுவத்தினர் இரண்டு முறை ஊடுருவி வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதேபோல கிழக்கு லடாக்  பகுதியில் சீனா இந்திய சீன எல்லையில் எல்லைக்கு அருகே சீன ராணுவத்தின் ஹெலிகாப்டரில் பறந்து வந்தது. கடந்த வாரம் தான் இந்த பகுதியில் உள்ள  பாங்காங் ஏரிக்கு இருதரப்பு வீரர்களும் கற்களை வீசி கொண்டு தாக்குதல் நடத்தினர். அதேபோல இந்தியா சீனா இடையே உள்ள எல்லை பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வரும் இந்த நிலையில் இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |