தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது . இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்ற நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல 12 மாவட்டங்களுக்கு எந்த தளர்வும் கிடையாது. 25 மாவட்டங்களுக்குள் தமிழ்நாடு இ பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.